செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் பொது மக்களுக்கான புயல் முன்னெச்சரிக்கை அறிவுரைகள்
1. பலத்த காற்று வீசும்போது பதற்றப்படாமல் அமைதியாக, தொடர்ந்து புயல் மற்றும் மழை குறித்த எச்சரிக்கை செய்திகளை கண்காணிக்க வேண்டும்.
2. பலத்த காற்று வீசும்போது வெளியில் செல்லாமல் பாதுகாப்பான கட்டிடங்களில் தங்கி இருக்க வேண்டும்.
3. பழைய மற்றும் சிதலமடைந்த கட்டிடங்களிலோ, மரத்தின் அடியிலோ தஞ்சம் அடைவதை தவிர்க்க வேண்டும்.
4. தேவையான உணவு, மருந்து மற்றும் அத்தியவாசிய பொருட்களை கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
5. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக குடை பயன்படுத்துவதை தவிர்த்து ரெயின் கோட் பயன்படுத்த வேண்டும்.
6. வீட்டில் உள்ள சிறுவர்களை நீர்நிலைகளுக்கு அருகே செல்ல அனுமதிக்க வேண்டாம்.
7. பலத்த காற்று வீசும் போது வாகனத்தில் வெளியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
8. மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் உலோக பொருட்களின் அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
9. வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளை கவனமாக கையாள வேண்டும்.
10. வீட்டில் உள்ள கதவுகள் கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும்
11. காற்று வீசுவது நின்று விட்டால் புயல் முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டாம், எதிர் திசையில் இருந்து காற்று வீசக்கூடும் என்பதால் தேவையின்றி உடனே வெளியில் வரக்கூடாது.
12. காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும்.
13. கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் முன்கூட்டிய தங்க வைக்க வேண்டும்.
14. கூரை வீடு, ஓடு வீடு மற்றும் தகர சீட் போன்ற வீடுகளில் வசிப்பவர்கள் அருகாமையில் உள்ள பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.
15. கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், தேவையின்றி யாரும் வெளியில் செல்ல வேண்டாம்.
அவரச தொடர்பு எண்கள் : 044-27427412, 044-27427412, 1077
மாவட்ட காவல்துறை Whatsapp : 7200102104