தேனி : தேனி கூடலூர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன், மற்றும் போலீசார் கீழக் கூடலூர் 4-வது வார்டு மூனுசாமி கோவில்தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மல்லிகா (42), என்பவரது வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சாவை விலைக்கு வாங்க வந்த கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஜிபின் (30), அன்சில் (30), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.