குமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS அவர்கள் உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று 04-08-2024 கன்னியாகுமரி கடற்கரையில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் தலைமையில் காலை 3 மணி முதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.