திருவாரூர்: காவல்துறை கூடுதல் இயக்குனர், சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்களின் உத்தரவுப்படி, ஆறு நாட்கள் புத்தாக்க பயிற்சியை, மாவட்டத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் அனைத்து காவல் ஆளினருக்கும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட் இ.கா.ப., அவர்கள் இன்று (02.02.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில், துவங்கி வைத்து காவலர்களுக்கு அறிவுரைகளும் புத்தாக்க பயிற்சியின் நோக்கத்தினையும் எடுத்துரைத்தார்கள்.
ஒவ்வொரு வாரமும் 6 நாட்களும் நடைபெறவிருக்கும் இப்பியிற்சியில் மாவட்டம் முழுவதும் 40 காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியானது, காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்தும், புதிதாக அமல்படுத்தப்பட்ட சட்டங்கள் குறித்தும், காவல்துறையினரின் பணி மற்றும் பொறுப்புகள் குறித்தும் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்வில் குற்றப்பதிவேடு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.பிலிப்ஸ் பிராங்க்ளின் கென்னடி, அவர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
















