தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ காலனியில் வசித்து வருகிறார். இவருக்கும் அச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகேசன் என்பவர் குடும்பத்திற்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் அச்சம் பகுதிக்கு சென்ற ஒரு கும்பல் கணேசனை வெட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலையில் தொடர்புடைய மாதவன்(55),முத்துசாமி(57), தங்கராஜ்(65) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.