மதுரை : மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் 1559 தினேஷ் என்பவர் இடப் பிரச்சினை சம்பந்தமாக எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மேற்படி காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதன் காரணமாக காவல் பணியில் இருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.விஜயராஜ்