மதுரை: கோச்சடையை சேர்ந்தவர் சிவாஜி மகன் ராமகிருஷ்ணன் (27). இவர் தத்தனேரி மெயின் ரோடு சிஎஸ்ஐ கல்லறை அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற இரண்டு பேர் அவரது காரை தாக்கி கண்ணாடியை உடைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராமகிருஷ்ணன் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கார் கண்ணாடியை உடைத்த நேரு மகன் முத்து சரவணன், அசோக் குமார் மகன் பிரகாஷ் என்ற வாத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி