திருவொற்றியூர், சென்னை மணலி, பல்ஜிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24) டெலிவிஷன் நடிகை. பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு 2019-ம் ஆண்டு சரவணன் என்பவருடன் திருமணமானது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையில் தான் நடித்து வரும் தொலைக்காட்சி தொடரில் உதவி இயக்குனராக பணிபுரியும் நவீன்குமார் (25) என்பவருடன் ஜெனிபருக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் காதலித்து வந்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் ஜெனிபர் வீட்டுக்கு சமாதானம் பேச நவீன்குமார் சென்றார். அப்போதும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த ஜெனிபரின் தந்தை பெரியநாயகம், அவருடைய இளைய மகன் சேவியர் இருவரும் நவீன்குமாரை கண்டித்ததுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நவீன்குமார், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி இயக்குனர் நவீன்குமார் மற்றும் அவருடைய நண்பர்களான பாண்டியன் (24), கார்த்திக் (27) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.