திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பவன் குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எஸ் செல்லத்துரை அவர்களின்
மேற்பார்வையில் திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.பாரதி அவர்கள் மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் மாவட்டம் முழுவதும் காணாமல் போன சுமார் 100 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர்.
இதில் முதற்கட்டமாக சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.குமார் ஐபிஎஸ் அவர்களிடம் அவர்கள் உரியவர்களிடம் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்