விழுப்புரம் : ஒரு பக்கம் காவல் துறையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சில காவலர்கள் இருக்கின்ற வேலையில் மக்கள் தொண்டே பெரியது என்று பாடுபடும் நல்ல காவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த கொடிய நோய் தொற்று நேரத்தில் இந்த நோயின் தாக்கத்திலிருந்து மனித உயிர்களை காக்க போராடுபவர்கள் மேன்மை பொருந்திய வர்கள் அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு அஜய்தங்கம் என்பவரும் ஒருவர் இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பது சிறப்பம்சமாகும் தற்போது உள்ள காவல் துறையின் கடுமையான பணிச்சுமை இழுக்கும் நடுவில் தனது மருத்துவ சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றார்
கண்ணியா குமரியில் இருக்கும் தான் படித்த ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் உதவியுடன்
கொரோனா நோயிலிருந்து மக்களை காக்க உதவிடும் வகையில் நோய் எதிர்ப்பு மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஹோமியோ மருந்தை விழுப்புரத்தை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு சென்றடையும் வகையில் ஒரு காவல் குழுவை அமைத்து வழங்கி வருகிறார் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் கற்ற மருத்துவத்தின் மூலம் மக்களுக்கு உதவிடும் இந்த காவல் அதிகாரியை மக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள் இவரது மக்கள் தொண்டு சிறக்க நாமும் வாழ்த்துவோம்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்