பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரவீனா என்ற (26). வயது பெண்ணும் அவரது கணவர் ராஜ்குமார் என்பவரும் எளம்பலூில் இருந்து சாமியார் காடு செல்லும் போது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை கொலை செய்து விட்டதாக பிரவீனாவின் கணவர் ராஜ்குமார் கூறிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் ராஜ்குமாரிடம் செய்த விசாரணையில் அவர் காவல்துறையினரிடம் கொடுத்த முன்னுக்கு பின் முரணான செய்திகளை கேட்டு அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் காவல்துறையினருக்கு தெரிய வந்ததது. இவ்வழக்கின் திருப்புமுனையாக அமைந்தது.
அதன்படி ராஜ்குமார் கூறிய வாக்கு மூலமாவது தனக்கும் தனது அண்ணி ஆனந்தி மற்றும் திருப்பெயரை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகவும் அதனை கண்டித்த தனது மனைவியை அண்ணியின் உறவினரான தீபக் என்ற நபரை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டிய ராஜ்குமார் 6 பேர் கொண்ட கூலிப்படையினருக்கு ரூபாய்.200000 /- தருவதாகவும் அதில் ரூபாய்.50000/- முன்பணத்தை தனது அண்ணியின் மூலம் தீபக்கிற்கு அனுப்பி வைத்தாகவும் அதிர்ச்சுயூட்டும் வாக்குமூலமளித்த ராஜ்குமார் சம்பவம் நடந்த (22.10.2023) அன்று தான் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்துவருவதால் சித்தப்பா வீட்டில் பிரவீனாவை விட்டு விடுவதாக கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் கூட்டிக்கொண்டு செல்லும் போது சாமியார் காடு அருகில் ராஜ்குமார் சிக்னல் கொடுக்க கூலிப்படையை சேர்ந்த நபர்கள் பிரவீனாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ராஜ்குமாரின் மீது சந்தேகம் வராமல் இருக்க அவரின்மீது இரண்டு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.P.பகலவன் இ.கா.ப அவர்களின், உத்தரவின்படியும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.C.ஷ்யாம்ளா தேவி அவர்களின், வழிகாட்டுதலின்படியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.மதியழகன் அவர்களின், மேற்பார்வையில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.A. பழனிச்சாமி அவர்களின், தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்தும் மோப்பநாய் படைப்பிரிவினர் சைபர் குற்றப்பிரிவினர் ஆகியோர்களை வைத்தும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.இந்நிலையில் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் .தீபக் த/பெ சுரேஷ் வாசுகி தெரு ஆம்பூர் திருப்பத்தூர் , சந்தோஷ்பாபு (எ) சஞ்சய் (19). த/பெ ஜெகன் அன்னை வாசுகி நகர் ஆம்பூர் ,சரண்குமார் (எ) சரண் (19) த/பெ சுரேஷ் குமரேசன் தெரு ஆம்பூர். ,லக்ஷன் (எ) லக்கி (21). த/பெ மூர்த்தி 1-வது குறுக்குத்தெரு ஆம்பூர் ,பப்லு (22). த/பெ அல்லாஹ் பக்ஸ் ஹெளசிங் போர்டு ஆம்பூர் மற்றும் ராஜ்குமார், ஆனந்தி ஆகிய 7 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தும் மேற்படி குற்றவாளிகள் 7 பேரையும் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் கத்தி உட்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த பெரம்பலூர் மாவட்ட தனிப்படை காவல் ஆய்வாளர்கள் திருமதி.அழகம்மாள், திரு.சக்திவேல், திரு.மணிவண்ணன் மற்றும் உதவி ஆய்வளர்கள் திரு.ராம்குமார், திரு.வினோத்கண்ணன், திரு.சங்கர், திரு.மனோஜ் திரு.ஆரோக்கியராஜ் திருமதி.செந்தமிழ்செல்வி மற்றும் தலைமைக் காவலர் அலெக்ஸ் மற்றும் காவலர்கள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள், வெகுவாக பாராட்டினார்கள்.