கரூர்: களக்காடு காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சிதம்பரபுரம் பெருமித்தான்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சிதம்பரபுரம் தெற்கு ரதவீதியை சேர்ந்த பாஸ்கர் (42), தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர் வைத்திருந்த மண் பானையில் கள் இருப்பது தெரிய வந்தது.
அவர் அப்பகுதியில் பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர்.