செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தசெங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சம்பத் என்பவரை கள்ளச்சாராயர் (BOOTLEGGER) தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் பரிந்துரைத்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.A.R.ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் கள்ளச்சாராயர் தடுப்பு காவலில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் மேற்படி குற்றவாளியை மதுராந்தகம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.பரிபூரணம் அவர்கள், மேற்படி குற்றவாளியை கள்ளச்சாராயர் தடுப்பு காவலில் புழல் சிறையில் அடைத்தார்.