ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஊஞ்சக்காடு என்ற இடத்தில் சட்டவிரோதமாக கர்நாடக மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்தியூர் போலீஸார் அங்கு சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அந்தியூர் வட்டக்காட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சரவணன்(29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 கர்நாடக மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.