கரூர்: பொங்கல் திருநாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் இ.கா.ப அவர்கள் தலைமையில் இன்று 13.01.2023ம் தேதி வெகு விமர்சியாக சமத்துவ பொங்கல் விழா கரூர் மாவட்டகாவல் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் காவல்துறையினர், அமைச்சுப்பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கரூர் மாவட்ட ஆயுதப்படையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் கரூர் மாவட்ட காவல் ஆளினர்கள், அமைச்சுப்பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவரும் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குகொண்டனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் இ.கா.ப அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்