மதுரை: திடீர் நகரை சேர்ந்த, மீனாட்சி சுந்தரம் மகன் விக்னேஷ் (31), பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள டாய்லெட் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, இரண்டு வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து. ரூபாய் 800-ஐ வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து, விக்னேஷ் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, கீரைத்துரை வேலுப்பிள்ளை தெரு நாகராஜ் மகன் சரவணபாண்டி என்ற சரண் (30) ,ஜெய்ஹிந்த்புரம் புலி பாண்டியன் தெரு, ராமன் மகன் விஷ்ணுகுமார் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி