செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பற்குணம் 42. இவர் மறைமலைநகர் தொழிற்சாலை பகுதிகளில் உள்ள சாலையோர டிபன் கடையில் நேற்று முன்தினம் சாப்பிட்டு கொண்டிருந்தார். 2 பேர் கத்திமுனையில் மிரட்டி பற்குணம் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசில் பற்குணம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் 25, பெங்களூரு பகுதியை சேர்ந்த அர்ஜுனன் 23. ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.