கரூர்: தமிழக அரசு நேற்றையிலிருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தியது. அதே போல் தர்மபுரி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் சாலைகளில், தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கண்காணிக்கவும், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் காவல்துறையினர் சார்பில், இன்று இரண்டாவது நாளாக தர்மபுரி நான்கு ரோட்டில் ட்ரோன் கேமரா மூலம் முக்கிய சாலைகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளி கண்காணித்தனர். அப்போது சாலைகளில் பொதுமக்களியின்றி வெறிச்சோடி காணப்பட்டது..