மதுரை: ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர். மூக்கையா மகன் சோனை முத்து(34) இவர் தெற்கு வாசல் கான்சா மேட்டு தெரு தெருவில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் தனது நகையை அடகு வைத்துள்ளார். ரூபாய் 3 லட்சத்து 56 ஆயிரத்து நானூறு ரூபாயை அசல் வட்டியுமாக செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் திருப்பிக்கொடுக்காமல் இழுத்து அடித்துள்ளனர். மீண்டும் அவர் வற்புறுத்தி கேட்டபோது வாசுதேவன் அவரது மகன் அஜித்குமார் மற்றும் ராம்குமார் ,கோபி ஆகியோர் அவரை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர். இது குறித்து சோனைமுத்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி