தர்மபுரி : தர்மபுரி நகரிலுள்ள ஒரு பாத்திரக்கடை மற்றும் ஒரு துணிக்கடையின் மேற்கூரையை உடைத்து கடந்த 2023 -ல் ரூ. 1,86 இலட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். மேலும் எஸ். ஐ விஜயசங்கர் தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வந்தனர். இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனபள்ளியை சேர்ந்த ஷேக் அக்ரம்(24). என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குற்றவாளியை பிடித்த தனிப்படை எஸ். ஐ விஜயசங்கர் மற்றும் போலீசார் சந்திரசேகர் பிரதாப் கண்ணன் சின்னசாமி வெங்கடேசன் ஆகியோரை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் பாராட்டினார்.