திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தேவையில்லாமல் வெளிவரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா அவர்களது உத்தரவின்பேரில், நகர்புற துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களது மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு.ரஞ்சித்,திரு.திரவியம், தலைமை காவலர் திரு.கோவிந்தசாமி, எஸ்.பி.சி.ஐ.டி திரு.ஜெயப்பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் மணிக்கூண்டு அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.