கோவை: கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பாலமுரளி சுந்தரம் ,சப் இன்ஸ்பெக்டர்கள் திரு.பாண்டியம்மாள், திரு.ஜெகநாதன் ஆகியோர் கவுண்டம்பாளையம் அசோக் நகர் பகுதியில் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர் .
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சோதனை நடத்தினார்கள். அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கோவை கவுண்டம்பாளையம் காமராஜர் வீதியை சேர்ந்த ரவி மனைவி தேன்மொழி 40 என்பது தெரியவந்தது
.இதேபோல உருமாண்ட பாளையம் ரயில்வேகேட் அருகே கஞ்சா விற்றதாக கவுண்டம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் மனைவி மஞ்சு என்ற மணிமேகலை 27 கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.