திருநெல்வேலி : விக்கிரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து விகே புரம் காவல் ஆய்வாளர் சீதாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதில் கஞ்சா வியாபாரிகளான களக்காடு சிங்கிகுளத்தை சேர்ந்த மணி மனைவி சரண்யா 23, சுப்பிரமணியன் 24, மகன் சம்சுதீன் 33, ஆம்பூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த ஜான் மகன் கிஷோர் 20 ஆகிய 4 பேரை போலீசார் பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 2¾ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.