மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாசலபதி பள்ளி அருகே திரு. முருகேசன் சார்பு ஆய்வாளர், மற்றும் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் போலீசார் கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்தனர். மேற்படி நபரிடம் இருந்து கஞ்சா சுமார் 150 கிராம் மற்றும் இருசக்கர வாகனம்,செல்போன் போலீசார் பறிமுதல் செய்து, மேற்படி நபர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி