குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் சகின் 29, பெனிட் எடிசன் 23, இஸ்ரவேல் 21, மனீஷ் 21. ஆகியோரிடமிருந்து 250 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்து. 4 பேரையும் பூதப்பாண்டி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.