குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று கருங்கல் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. மகேஷ் அவர்கள் குறும்பனை பகுதியில் காவலர் சகிதம் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்த போது .
அவர்கள் கீழ்குளம் பகுதியை சேர்ந்த அனிஷ் 23, வினித் 21, என்பது தெரியவந்தது. அவர்களை தீவிர விசாரணை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதிகளில் விற்பனை செய்ததும், குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்பு அவர்கள் வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சுபின் 21. என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.