கோவை: கோவை ராமநாதபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் திரு.மெய்யழகன் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர்.
சோதனையில் அந்த வாலிபரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது . விசாரணையில் ராமநாதபுரம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் 26. என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்