திண்டுக்கல்: திண்டுக்கல் கோவிந்தாபுரம் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்வதாக மேற்கு காவல் ஆய்வாளர் திரு.ராஜசேகர்க்கு கிடைத்த தகவலின்படி கோவிந்தாபுரம் மருதாணிகுளம் பகுதிகளில் ஆய்வாளர் திரு.ராஜசேகர்,சார்பு ஆய்வாளர்கள் திரு.அபுதல்கா,திரு.சுப்பிரமணி மற்றும் காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மருதாணிகுளம் காளியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்த மருதாணிகுளம் பகுதியை சேர்ந்த பரணிதரன்(20) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா