திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் நேருஜி நகர் ரவுண்டானா பகுதியில் ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் திரு.அபூதல்ஹா, காவலர் திரு. ஜோசப் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மாரம்பாடி பகுதியை சேர்ந்த ரவி(41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா