திருச்சி: திருச்சி மாநகரத்தில் கடந்த 17.11.22-ந் தேதி சத்திரம் பேருந்து நிலையம் அருகில், அரசால் தடைசெய்யப்பட்ட இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்த உறையூர் சேர்ந்த அபுதாகீர் என்பவரிடமிருந்து சுமார் ரூ.20,000/- மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றி குற்றவாளி யை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் விசாரணையில் குற்றவாளி அபுதாகீர் மீது அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்ததாக 4 வழக்குகளும், ஒரு அடிதடி வழக்கு உட்பட 6 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே, மேற்படி குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.