திருவண்ணாமலை : கீழ்பெண்ணாத்தூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த தெய்வகுமார் (எ) தேவகுமார் (23), என்பவர்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கீழ்பெண்ணாத்தூர் காவல்
ஆய்வாளர் திரு.மு.கோவிந்தசாமி, அவர்கள் வழக்குபதிவு செய்து,
நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேற்கண்ட நபர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர்
திரு.பா.முருகேஷ் ,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட நபரை குண்டர் தடுப்பு
காவல் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.