கோவை: கோவை பக்கம் உள்ள வீரகேரளம் பாரதி வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50 ) இவர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். தற்போது ஊரடங்கால் சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் கஞ்சா வியாபாரம் செய்ய தொடங்கினார் .இது பற்றி வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு . 1500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்