திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.அறிவழகன் அவர்களின் தலைமையில், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.M.சத்தியாநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள் இணைந்து கலசப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போளூர் to செங்கம் சாலையில் உள்ள, வசூர் புதுப்பாளையம் கூட்ரோட்டில், கல்குவாரி அருகே சோதனை செய்தபோது செல்வி வ/34, க/பெ. சீனிவாசன், நடேசன் தெரு, அல்லி நகர், போளூர் வட்டம் என்பவர் தன்னுடைய வீட்டில் சுமார் 1250 கிராம் கஞ்சா மற்றும் 30 லிட்டர் நாட்டு சாராயத்தையும், மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வரவே, அவரை உடனே கைது செய்து,அவரிடமிருந்து கஞ்சா மற்றும் நாட்டு சாராயத்தை கைப்பற்றி, கலசபாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், போளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, போளூர், மாட்டுப்பட்டி தெருவில் சோதனை செய்தபோது சீனு (எ) சீனிவாசன், (47) என்பவரது வீட்டில் சுமார் 2250 கிராம் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவரவே அவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு போளூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.