கோவை : கோவை மாவட்டம், சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (02.04.2023) பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான பெரியநாயக்கன் பாளையம் Housing Unit (வளம் மீட்பு பூங்கா) பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் மெய்யரசன் (26), அதே பகுதியை சேர்ந்த கணேஷ் மகன் புவனேஷ் (26) கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் பரத் (32), மற்றும் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் லலித்குமார் (26) ஆகிய 4 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1.050 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா, ரூ.30,000/- மதிப்புள்ள 3.200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்