குமரி: வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. திருமுருகன் ,உதவி ஆய்வாளர் திரு.சத்திய சோபன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் பைக்கை திருப்பி வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், விரட்டி சென்று பிடித்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணு பிரகாஷ் 22 மற்றும் அகில் ஜெயன் 26, என்பதும், அவர்கள் இருவரும் தேனியில் இருந்து கஞ்சாவை வாங்கி குமரி மாவட்டத்தில் விற்க முயன்றது தெரியவந்தது.தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள சுமார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.