மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்டம், கீரிப்பட்டி மற்றும் கல்யாணி பட்டி அருகே திரு. கனகசாமி சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்கள் மற்றும் போலீசார் ரோந்து செல்லும் போது, சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று நபர்கள் கைது செய்யபட்டனர். மேற்படி நபர்களிடமிருந்து கஞ்சா சுமார் 2 கிலோ 350 கிராம் மற்றும் செல்போன் –2 இருசக்கர வாகனம் ஒன்றும், போலீசார் பறிமுதல் செய்து மேற்படி நபர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது