ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு நரிப்பையூர் அருகே வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர், 24. இவர் அதே பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக்கிடம் கஞ்சா வாங்க வந்தார். அப்போது இருவரையும் போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.
அபூபக்கர் சித்திக்கிடம் இருந்து 33 கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா வாசனை நுகரும் காகிதத்தை (ஓசிபி பேப்பர்) பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், அபூபக்கர் சித்திக் தென்னந்தோப்பில் கஞ்சா செடிகள் வளர்த்தது தெரிய வந்தது. இதையடுத்து தாசில்தார் திரு. சேகர் தலைமையில் போலீசார் கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்தனர்.