திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.அறிவழகன் அவர்களின் மேற்ப்பார்வையில், கலசபாக்கம் வட்ட காவல் ஆய்வாளர் திரு.N.ஜனார்த்தனன் அவர்களின் தலைமையில், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.M.சத்தியாநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள் ஜமுனாமரத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம்மியம்பட்டு கிராமத்தில் நடத்திய சோதைனையில்,
குற்றவாளி பாஞ்சாலை க/பெ கோவிந்தன், ஜமுனாமரத்தூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் என்பவரின் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 3 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், மேலும் குற்றவாளியின் நிலத்தில் நடத்திய சோதனையில், நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 45 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்து, குற்றவாளி பாஞ்சாலை கைது செய்யப்பட்டு, ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.