திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், திரு. செல்வி , திரு.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் திரு.R.S.பார்த்தசாரதி, உதவி ஆய்வாளர் திரு.S.சுந்தரேசன் மற்றும் காவலர்கள் நடத்திய சோதனையில்,
திருவண்ணாமலை சமுத்திரம் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி கவிதா, வயது 40 என்பவரிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவும், திருவண்ணாமலை அண்ணா நகர் 3வது தெரு வைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ் (எ) தமிழரசன், வயது 28 என்பவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவும், திருவண்ணாமலை சமுத்திரம் காலனியை சேர்ந்த உமாமகேஸ்வரன் மனைவி நளினி, வயது 28 என்பவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டு, மூவரும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.