கோவை : கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் மனம் திருந்திய பழைய கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக, பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம், அவர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினரின் முயற்சியினால் தன்னார்வலர்களின் உதவியுடன் பழைய கஞ்சா குற்றவாளிக்கு ரூபாய் 25,000/- மதிப்புள்ள பெட்டிக்கடை வைத்துக் கொடுத்து மீண்டும் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடாமல் நல்வழிபாதையில் செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த காவல்துறையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்