தேனி : தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.முனியம்மாள் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அனுமந்தன்பட்டி பேருந்து நிலையம் அருகில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக கம்பத்தை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ய முயன்றபோது குற்றவாளியானவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி சென்று தலைமறைவாகிவிட்டார். அந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 10 கிலோ கஞ்சா இருந்தையடுத்து அதனை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த நிலையில்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு.திவான்மைதீன் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் அதிரடியாக செயல்பட்டு மேற்படி வழக்கில் தொடர்புடைய மனோகரன் @ முட்டைக்கண் மனோகரன் என்பவரை கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளியானவர் மீது கொலை வழக்கு உட்பட 10க்கும் மேற்பட்ட கஞ்சா தொடர்பான வழக்குகள் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.