கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திரு.ஜீவராஜா மணிகண்டன் வாகன சோதனை நடத்தினார். அப்போது 3 பைக்கில் வந்த 4 ஆசாமி களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார், அவர்களிடம் 3.420 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக 4 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.. இவர்களிடமிருந்து 3பைக் 3..420 கிலோ கஞ்சா |ஒரு செல்போன் பணம் 3460 கைப்பற்றப்பட்டது. இவர்களில் கார்த்தி என்ற கார்த்திகேயன் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சிவபிரசாத் ஜீவானந்தம் ஆகியோர் கூலித் தொழில் செய்து வருகிறார்கள். மனோஜ்குமாருக்குநெகமம் காவல் நிலையத்துக்கு உட்பட ஒரு திருட்டு வழக்கு உள்ளது என்பது தெரியவந்தது. இவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.