பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தோடு பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு சிறப்பு கஞ்சா ஒழிப்பு படையினரை நியமித்தும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளையும் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார். மேலும் பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளில் (14.12.2022)-ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.மணி, அவர்களின் தலைமையில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிறப்பு ரோந்து அலுவலில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் (தலைமையிடம்), துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சஞ்சீவ் குமார் (பெரம்பலூர் உட்கோட்டம்), பெரம்பலூர் நகர காவல் காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜன் என அனைவரும் பெரம்பலூரை சுற்றியுள்ள நகர்ப்புற பகுதிகளில் கஞ்சா ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயிரிடுவது விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்து சட்டப்படி குற்றமாகும். மேற்படி குற்றத்தினை செய்பவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.