திருநெல்வேலி : தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளை முறையாக கடைபிடித்து பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்
தமிழக அரசு 10.05.2021ம் தேதி முதல் 24.05.2021 ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடித்து பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும் படியும், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்வோர் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்லும் படியும், பொதுஇடங்களில் முறையான சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் படியும் அறிவுரை கூறி வருகின்றனர்.