பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறையினர் ரோந்து அலுவலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (07.12.2022)-ம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து எண்-1-ல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜெயராமன் தலைமை காவலர் திரு.சக்திவேல் மற்றும் முதல்நிலை காவலர் திரு.அரவிந்தன் ஆகியோர்கள் பணியில் இருந்தனர். அப்போது மாவட்ட காவல் கட்டுபாட்டு அறையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திலிருந்து சென்னை செல்வதற்காக முதியவர் ஒருவர் TN 45 N 3629 என்ற அரசு பேருந்தில் வந்ததாகவும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளை இறக்குவதற்காக சற்று நேரம் நின்று கொண்டிருந்தபோது முதியவர் இயற்கை உபாதை கழிக்க பேருந்திலிருந்து கீழே இறங்கியதாகவும் திரும்ப வந்து பார்க்கும் போது தான் வந்த பேருந்தை காணவில்லை என்றும் தன்னுடைய உடைமைகள் அனைத்தும் அந்த பேருந்தில் தான் இருப்பதாகவும் எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியிலிருந்த உதவி ஆய்வாளர் திரு.பெரியசாமி அவர்களிடம் கேட்டுள்ளார்.
மேற்படி பேருந்தினை திருமாந்துறை டோல் பிளாசாவில் நிறுத்தி மேற்படி முதியவரின் பணப்பை மற்றும் உடைமைகளை மீட்கும்படி உத்தரவு கொடுத்ததின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை ரோந்து எண்-1 காவல் துறையினர் திருமாந்துறை டோல்பிளாசாவில் வாகன தனிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மேற்படி பேருந்தினை கண்ட காவல்துறையினர் பேருந்தினை நிறுத்தி சோதனையிட்டதில் முதியவரின் உடைமைகள் அடங்கிய பை இருந்ததை எடுத்தனர். பின்னர் மேற்படி முதியவரை திருமாந்துறை டோல்பிளாசா வரவழைத்து அவரது உடைகள் மற்றும் அதிலிருந்த பணம் ரூபாய் 1,35,000/- முதியவரிடம் ஒப்படைத்தும் முதியவரை மீண்டும் சென்னை செல்வதற்கு வேறொரு பேருந்தில் ஏற்றி விட்டனர். மேற்படி முதியவர் தவறவிட்ட உடைமைகளை சிறப்பாக செயல்பட்டு முதியவரிடம் ஒப்படைத்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து எண்-1 காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி, அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.