திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மோரணம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது.
இந்த ஏரியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அர்ஜூனன் என்பவர் நாட்டு வெடிகுண்டு டெட்டனேட்டர்கள் கிடப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து அவர் மோரணம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெளியில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி செயலிழக்க செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் பன்றிகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.