திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆறு தனிப்படையினர் நியமிக்கப்பட்டனர். இந்தப் படையினர் திண்டுக்கல் எஸ்.பி.ரவளிபிரியா உத்தரவின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது ,சூதாட்டம் நடத்தியவர்கள் கைது, மதுபாட்டில் விற்றவர் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. இந்நிலையில்திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 48 மணி நேரத்தில் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,72 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடங்கும் எஸ்.பி. நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.