திண்டுக்கல்: வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது ஒத்தப்பட்டியிலிருந்து கொம்பேறிபட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் மர்ம நபர்கள் 2 பேர் மண் அள்ளி டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டதும் டிராக்டர்களை அங்கேயே நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
டிராக்டரை சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வாகனத்தை தானாக ஓட்டி வந்து போலீஸ் நிலையத்தில் நிறுத்திய சப்-இன்ஸ்பெக்டரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
அதன் பின்னர் நடத்திய விசாரணையில் மண் அள்ளி டிராக்டரில் கடத்த முயன்றது கொம்பேறிபட்டியை சேர்ந்த பாஸ்கரன்(59) பிலாத்தைச் சேர்ந்த முருகானந்தம்(32) என்பது தெரியவந்தது. அதன்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.