திருப்பத்தூர் : 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பள்ளி மாநில சோதனைச் சாவடியை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வெளிமாநில மது, கள்ளச்சாராயம் மற்றும் கனிமங்கள் கடத்தலை தடுக்கும் வகையில் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யவும், 24 மணி நேர CCTV கண்காணிப்பு மேற்கொள்ளவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து திம்மாம்பேட்டை காவல் நிலையத்தையும் பார்வையிட்டு, ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.




















