பெரம்பலூர்: கொரோனா வைரஸ் இரண்டாம் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மருத்துவமனைக்கு செல்ல போக்குவரத்து வசதியின்றி நின்று கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் எம் ஜி ஆர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற நபர் மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் உதவி செய்யுங்கள் என்று கேட்டதற்கு இணங்க மேற்படி நபரை பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கிய பிரகாசம் அவர்கள். தனது அரசு வாகனத்தில் அழைத்து சென்று உரிய நேரத்தில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை